நம் தமிழகத்தில் அவ்வப்போது அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுவும் குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த படி தற்போது காவல் துறையிலிருந்து 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் உள்ளது. அதில் ஒரு ஐஜி, 12 எஸ்.பி.கள் என மொத்தம் 13 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் விமலா லஞ்ச ஒழிப்பு துறை சிறப்பு புனராய்வு எஸ்பி ஆக மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட துணை ஆணையர் அரவிந்த் சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தியாகராயநகர் துணை ஆணையராக இருந்த ஹரிபிரசாத் கன்னியாகுமரி எஸ்பி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை போலீஸ் அகாடமி துணை இயக்குனர் ஜெயலட்சுமி நவீன காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
ரயில்வே ஐஜியாக இருந்த கல்பனா நாயக் மின்வாரிய பிரிவு விஜிலன்ஸ் ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.