100 வருஷம் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது!

கடந்த சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்தது.  அதிலும் குறிப்பாக அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் இந்த கூட்டணியில் பல்வேறு இழுபறி இருந்ததால் தேமுதிக கூட்டணியை விட்டு விலகியது. விஜயகாந்த்

விலகிய கையோடு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் தேமுதிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.

இதனால் நாளுக்கு நாள் வலுவிழந்ததாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தேமுதிகவிற்கு அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதே உண்மை தான்.

இவ்வாறு இருக்கையில் தேமுதிகவில் இருந்து நாளுக்கு நாள் உறுப்பினர்கள் கலைந்து கொண்டு வந்தனர். தற்போது தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், 100 வருடங்கள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் தேமுதிக மீது அவதூறு பரப்பி வருபவர்களின் வார்த்தைகளை ஒருபோதும் தொண்டர்கள் யாரும் நம்பவேண்டாம் என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment