பொதுவாக தவறு செய்தவர்களை கண்டித்து அவர்களை திருந்தும் வகையில் இருப்பதற்காக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள சிறைச்சாலைகளில் தான் அதிக அளவு தவறான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் சிறைச்சாலையில் நிகழ்ந்துள்ளது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
அதன்படி அதிமுக ஆட்சியில் மதுரை சிறைச்சாலையில் நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்ததாகவும், விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் மனுதாரர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.
விசாரிக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார். கைதிகள் தயாரித்த மருத்துவ, எழுது பொருள்களில் போலி கணக்கு தயாரித்து ஊழல் என்று வழக்கறிஞர் புகழேந்தி மனுவில் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
அரசு அலுவலகம் மருத்துவமனை நீதிமன்றங்களுக்கு பொருள்களை அனுப்பியதாக போலி கணக்கு உள்ளது என்றும் மனுதாரர் புகழேந்தி கூறியுள்ளார்.
உற்பத்தியை அதிகரித்து காட்டி முறைகேடு செய்ததாகவும் மனுவில் வழக்கறிஞர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். முறைகேட்டில் சிறை துறை கண்காணிப்பாளர், டிஐஜி களுக்கு தொடர்பு எனவும் மனுதாரர் புகார் அளித்துள்ளார்.