5000 ரூபாயை கடந்த ஒரு கிராம் தங்கம்..!! 40 ஆயிரம் ரூபாயை தாண்டி அதிர்ச்சி…!!
உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ஏதேனும் விலை ஒன்று நிர்ணயம் செய்துக் கொள்ளலாம். ஆனால் தங்கம் மற்றும் வெள்ளிக்கு மட்டும் அவ்வாறு விலை நிர்ணயம் செய்ய முடியாது.
ஏனென்றால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மணிக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கும். அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
அதிலும் உக்ரைன்-ரஷ்யா போருக்குப் பின்பு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 ஆயிரத்து 400 க்கு விற்பனை செய்து வர்த்தகர்கள் மற்றும் இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 288 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 40 ஆயிரத்து 400 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் கிராமுக்கு ரூபாய் 5 ஆயிரத்து 50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 75.20 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
