Connect with us

சிறுவன் மரணம்: காரைக்காலில் இன்று ஒருநாள் கடையடைப்பு!!

strike

தமிழகம்

சிறுவன் மரணம்: காரைக்காலில் இன்று ஒருநாள் கடையடைப்பு!!

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சிறுவன் பலியான சம்பவத்தை தொடர்ந்து இன்று ஒரு நாள் கடைஅடைப்பு போராட்டம் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரைக்கால் அடுத்த நேருநகர் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகண்டன், படிப்பில் போட்டி காரணமாக விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து பலியானார். இத்தகைய சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மாணவன் பலியானதற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அதோடு சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சூழலில் சிறுவன் பாலமணிகண்டன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடைஅடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் இயங்காததால் சாலை முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top