இங்கிலாந்து ராணி மறைவை ஓட்டி நேற்று ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டதால் பரபரப்பு நிலவியது
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி இந்தியாவில் நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்தது அதன் பெயரில் நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன
அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பல்வேறு ஒன்றிய அரசு அலுவலகங்களில் நேற்று ஒரு நாள் மட்டும் தேசியக்கொடி அரக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று இரண்டாவது நாளாக தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறந்ததால் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித பரபரப்பு நிலவியது
அதாவது ஒன்றிய அரசின் அறிவிப்பை தொடர்ந்து இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்காக நேற்று நெல்லை ரயில் நிலையத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது ஆனால் இந்த நிகழ்வை சரிவர கண்காணிக்காத ரயில்வே அதிகாரிகள் நேற்றுடன் ஒரு நாள் துக்க அனுசரிப்பு முடிந்த நிலையில் தேசிய கொடியை மேலே உயர்த்தாமல் இன்று இரண்டாவது நாளாக அரை கம்பத்தில் பறக்க விட்டுள்ளனர்
பொதுவாக இது போன்று முக்கிய தலைவர்கள் உயிரிழந்தால் தான் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவே நெல்லை ரயில் நிலையத்தில் 2வது நாளாக தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்ததால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பரத்தனர் .