சென்னையில் ஒரு நாள்: 7 சாலைகளுக்கு தடை! 11 சுரங்கப்பாதை மூடல்! தாம்பரத்தில் 23 செ.மீ மழை!

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையால் தமிழகத்தின் தலைநகரமான சென்னை முழுவதும் நீருக்குள் மூழ்கியது. அதனைப் போன்று தற்போது சென்னையில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பல சாலைகள், வீடுகள் என அனைத்தும் நீருக்குள் மூழ்கி உள்ளன.

வடகிழக்கு பருவமழை

அதன்படி சென்னையில் மழை நீர் தேக்கத்தின் காரணமாக 11 சுரங்க பாதைகள் மூடப்பட்டு உள்ளது. தொடர் கனமழையால் தண்ணீர் தேங்கி உள்ளதால் இந்த 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன என்ற தகவலும் வெளியாகி உள்ளன.

அதன்படி வியாசர்பாடி, கணேசபுரம், கெங்கு ரெட்டி, அஜாக்ஸ், மேட்லி, துரைசாமி சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன்,காக்கன், வில்லிவாக்கம் சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன.

சுரங்கப்பாதை

சென்னையில் மழை நீர் தேங்கி உள்ளதால் ஏழு சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகவும் காணப்படுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் விடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் பயணிக்கின்றனர். நேற்று மட்டும் சென்னையில் அதிகபட்சமாக தாம்பரம் பகுதியில் 23 சதவீதம் அதிக மழை பெய்தது.

அதனை தொடர்ந்து சோழவரத்தில் 22 சென்டி மீட்டர் மழையும், எண்ணூரில் 20 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கும்மிடிப்பூண்டி, செங்குன்றத்தில் தலா 18 சென்டி மீட்டர் மழை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 15 சென்டி மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 11 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment