உச்சத்தில் ஒமைக்ரான்: இதுவரை இல்லாத அளவிற்கு பிரிட்டனில் ஒரே நாளில் பாதிப்பு!

உலகம் முழுவதும் உக்கிரமாக பரவிக்கொண்டு வருகிறது ஒமைக்ரான்.  ஒமைக்ரான் முதலில் தென்னாப்பிரிக்க நாட்டில் தோன்றியது. அதன் பின்னர் அடுத்தடுத்து வேகமாக உலகம் முழுவதும் பரவியது.

குறிப்பாக பிரிட்டன் நாட்டில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஒமைக்ரான் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அதன்படி அங்கு ஒரே நாளில் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் குறைந்தபட்சம் 10,000 பேருக்கும் அதிகமானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் பிரிட்டன், மான்ஸ்டர் போன்ற பகுதிகளில் ஒமைக்ரான்  இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வருகிறது.

அந்த டெல்டாவை விட ஒமைக்ரான் அதிக வீரியம் உள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அடுத்து வரும் வாரங்களில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment