தனியார் மருத்துவமனையில் 1 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவில்லை!!

நம் இந்தியாவின் பெரு முயற்சியினால் நூறு கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த உலக சாதனை பிறநாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதற்கு பெரிதும் உதவியாக இருந்தது கொரோனா தடுப்பூசி முகாம்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரின் அயராது உழைப்பு தான்.

தடுப்பூசி

இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் காலாவதியாகும் நிலையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

இவை இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் தங்களிடம் இருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் விரைவில் விநியோகிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளன.

ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளில் 20% தடுப்பூசிகள் அடுத்த மாதம் காலாவதியாகும் நிலையில் உள்ளன. சுமார் 20 லட்சம் கொரோனா  தடுப்பூசிகள் டிசம்பர் மாதம் வீணாக கூடும் என்று அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment