கொலை செய்யப்பட்ட திருச்சி எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு

ஆடு திருடியவர்களை பிடிக்க முயன்ற சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் அவர்கள் இன்று திருடர்களால் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி நவல்பட்டியைச் சேர்ந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் என்பவர் ஆடு திருடியவர்களை அவர்களை விரட்டிப் பிடிக்க முயற்சி செய்தார். இந்த நிலையில் திடீரென மர்ம நபர்கள் அவரை சுற்றிவளைத்து கொலை செய்தனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட திருச்சி எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் பூமிநாதன் அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment