இன்றைய தினம் மத்திய உணவு துறை அமைச்சரின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சர் சங்கரபாணி கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் கிடைத்தது.
இந்த கூட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தில் 45 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற உள்ளன என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உணவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பியூஸ் கோயல் பேசினார். ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் பயனடைவர் என்று கூறினார்.
ஆயுஸ்மான் பாரத் திட்டத்திற்கான அட்டைகளை வழங்க ஒரே நாடு ஒரே ரேசன் முறை பயன்படுத்தப்பட உள்ளன என்றும் கூறினார். உத்தரபிரதேசம் இந்த முறையை பயன்படுத்தி நம் மாநில மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்க தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டு கூறினார்.
ஊட்டச்சத்து நிறை உணவை விநியோகிப்பது அவசியம், மாநிலங்கள் நெல், கோதுமை விதைப்பை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.