மீண்டும் ஒரு புதிய பூஞ்சை: அமெரிக்காவில் வேகமாக பரவுவதாக தகவல்!

2ec07a5e1072dbd14f503839b9cbdb8b

ஏற்கனவே இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் மட்டுமின்றி கலர் கலராக பூஞ்சைகளும் பரவி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் சிவப்பு மஞ்சல் பச்சை என கலர் கலராக பூஞ்சைகள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமெரிக்காவில் புதிய வகை பூஞ்சை ஒன்று பரவி வருவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறியபோது அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கேண்டிடா ஹாரிஸ் என்ற புதிய வகை பூஞ்சை பரவி வருவதாகவும் இந்த வகை பூஞ்சைகள் மனிதர்களின் ரத்த ஓட்டத்தை நிறுத்தி மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு வீரியத்தை பெற்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் 

காய்ச்சல் மற்றும் குளிர் ஆகிய இரண்டும்தான் இந்த பூஞ்சைகளின் அறிகுறி என்றும் எனவே இந்த இரண்டு அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சென்று கேண்டிடா ஹாரிஸ் என்ற பூஞ்சை தாக்கி உள்ளதா என்பதை சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment