Connect with us

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு: முதல் நாளில் 71 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரம்பின!

கலந்தாய்வு

தமிழகம்

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு: முதல் நாளில் 71 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரம்பின!

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு: முதல் நாளில் 71 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரம்பின!

பல ஏழை எளிய மாணவர்களின் கனவாக, லட்சியமாக அமைந்துள்ளது மருத்துவப்படிப்பு. அவற்றிற்கு பெரும் தடையாக அமைந்துள்ளது நீட்தேர்வு. இருப்பினும் நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.

அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது. அதில் அரசு பள்ளியில் மட்டும் முழுவதும் படித்து சந்தானம் என்ற மாணவர் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்றைய தினம் நடைபெற்றது. இதில் முதல் நாளில் 71  எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவினருக்கு நேரில் நடைபெற்ற கலந்தாய்வில் 71 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரம்பி உள்ளது தெரியவந்துள்ளது.

இதில் 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ் இடங்களை தேர்வு செய்தனர். விளையாட்டு வீரர்களில் 7 பேரும், ராணுவ வீரர்களின் வாரிசுகள் 10 பேரும் எம்.பி.பி.எஸ் இடங்களை தேர்வு செய்தனர்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் முதல் நாளிலேயே நிரம்பியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு 212 இடங்கள் ஒதுக்கப் பட்ட நிலையில் முதல் நாளில் ஐம்பத்தி நான்கு இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. ஜனவரி 28, 29ம் தேதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறும் என்றும் கூறப் படுகிறது. ஜனவரி 30-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top