#Breaking காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் மரணம்; உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!

சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்ஐ  திடீரென  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மகேந்திரன் (58),  அதிகாலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். காவல்நிலையத்தில் பணியில் இருந்த காவலர் திடீர் உடல் நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.