மெர்சிடிஸ் பென்ஸ் காரை காலால் தள்ளும் ஆட்டோ டிரைவர்.. வைரல் வீடியோ

இந்திய சாலைகளில் பல வினோதமான நிகழ்ச்சிகளை அவ்வப்போது பார்த்திருப்போம். குறிப்பாக ஒரு வாகனம் பழுது அடைந்து விட்டால் அந்த வாகனத்தை இன்னொரு வாகனத்தில் இருப்பவர் கையால் அல்லது காலால் தள்ளிக்கொண்டு ஓட்டும் சாகச நிகழ்ச்சிகள் அவ்வப்போது நிகழ்ந்து வருவதுண்டு.

ஆனால் பொதுவாக இது இரு சக்கர வாகனங்களில் மட்டுமே இருக்கும் நிலையில் புனேயில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை ஆட்டோ டிரைவர் தனது காலால் தள்ளி கொண்டு சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

புனேவில் உள்ள கோரேகான்பூங்கா அருகே பழுதடைந்து நின்ற மெர்சிடிஸ் காரை ஆட்டோவில் சென்று கொண்டிருந்த டிரைவர் ஒரு காலால் தள்ளி கொண்டு ஆடோவை ஓட்டுகிறார். அவருடைய காலின் உந்து சக்தியால் மெர்சிடிஸ் கார் முன்னே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான இந்த நிகழ்வை ஆட்டோ டிரைவர் நிகழ்த்தியதை பலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இணைதளங்களில் வைரலாகி வருகின்றனர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.