ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் புகார்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

ஐ,ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய ஐ.ஜி முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் கடந்த 2018-ம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பெண் எஸ்.பி உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, இது குறித்து சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு இருந்தார்.

தொடர் விடுமுறை! மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்!!

இதனை எதிர்த்து கடந்த 2019-ம் ஆண்டு ஐ.ஜி முருகன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வழக்கு விவகாரத்தை மாற்றியமைக்கப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதே சமயம் ஐ.ஜி முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் தற்போதைய விசாகா கமிட்டி விசாரிப்பதில் ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.

அதிர்ச்சி! பிரிட்ஜ் வெடித்து விபத்து: 3 பேர் பலி!!

இதனை பதிவு செய்த நீதிபதி ஐ.ஜி முருகன் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment