நள்ளிரவு முதல்! ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்..!!

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் இயக்கப்படும் என ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளதால் நள்ளிரவு புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வாரவிடுமுறை, முகூர்த்த தினங்கள் போன்றவைகளால் சென்னையில் இருந்து ஏராளமான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதன் காரணமாக பேருந்துகளில் முன்பதிவு செய்து தாய் நிலையில் பயணிகள் உள்ளனர்.

இந்த சூழலில் ஆம்னி பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறியுள்ளார். அதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து 700-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் புறப்படும் என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் வழயாக புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதால் தேவைப்படும் பட்சத்தில் புதுவை, நாகை, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு மாற்றுவழிச்சாலையில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், புயலின் காரணமாக ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை அதிகரிக்குமா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.