இன்று இரவு வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும்: மாறுபட்ட அறிவிப்பால் பயணிகள் குழப்பம்!

இன்று இரவு சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்திருந்த நிலையில் இன்று இரவு வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

வங்க கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில் இந்த புயல் இன்று கரையை கடக்கும் என்பதால் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவையில் இருந்து ஈசிஆர் வழியாக சென்னை வரும் பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்று இரவு வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக அரசு பேருந்துகள் இயங்காது என்ற நிலையில் தனியார் பேருந்துகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது அந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

இருப்பினும் பயணிகளின் பாதுகாப்பை கருதி ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு அரசு அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.