Tamil Nadu
ஊரடங்கின்போது ஆம்னி பேருந்துகள் இயங்கும்: ரயில்கள், விமானங்கள் இயங்கும் என அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என ஆம்னி பேருந்துகள் சங்கத்தின் செயலாளர் அன்பழகன் அவர்கள் அறிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இரவு நேரத்தில் ஆம்னி பேருந்துகள் இயங்கும் அதற்கு பதிலாக பகல் நேரத்தில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்றும் ஊரடங்கின் போது தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து ஆம்னி பேருந்துகள் இரவில் இயங்குவதற்கு பதிலாக பகலில் இயங்கும் என ஆம்னி பேருந்துகள் சங்கத்தின் செயலாளர் அறிவித்துள்ளார். அதேபோல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் ரயில்கள் விமானங்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது ரயில்கள் தங்குதடையின்றி இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்திற்கு செல்ல ஆட்டோக்கள் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
