ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்; இரண்டே நாட்களில் முக்கிய முடிவு – அமைச்சர் தகவல்!

அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டண நிர்ணயம் குறித்து இரண்டோரு நாட்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என போக்குவரத்துறை எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் என்றும், அரசுப்பேருந்துகள் மக்களின் சேவைக்காக இயங்குவது. ஆம்னி பேருந்துகள் அப்படி அல்ல. அது தனியார் ஒப்பந்த வாகனங்களாக இந்தியா முழுமைக்குமான கட்டண விகிதத்துடன் இயங்குவதாகவும் தெரிவித்தார்.

ஏழை எளியவர்கள், நடுத்தர மக்களுக்கான சேவையை நாங்கள் வழங்கி கொண்டிருக்கிறோம். கூடுதல் சேவையை எதிர்பார்ப்பவர்கள் தான் ஆம்னி பேருந்தை நாடுகின்றனர். அரசுப்பேருந்து மற்றும் தனியார் பேருந்துக்கு கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆம்னி வகை பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் கிடையாது. இந்தியா முழுமைக்கும் இதுதான் நிலை.

அதனால்தான் தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர். மக்கள் தரப்பிலிருந்து தான் பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறேன்.

தமிழக அரசு சார்பில் 21ஆயிரம் பேருந்துகள் மக்களுக்காக இயங்கி கொண்டிருக்கிறது. ஆனால், தனியார் ஆம்னி பேருந்தில் அதன் கட்டண தெரிந்தும், அதில் பயணிப்பவர்கள் அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment