தீபாவளி பண்டிகை… ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்வு..!!

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.3000 கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு உயர்ந்து இருப்பதாக தெரிகிறது.

அதே போல் திருச்சி, ஈரோடு, நாகர்கோவில் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்ந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.