தமிழகத்தில் அதிகரிக்கும் ஒமிக்ரான்….! : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

உலகின் பல நாடுகளிலும் பரவி வரும் ஓமிக்ரான் வைரஸானது இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. இதுவரை 415 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா வகை கொரோனாவை விட இது வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளதால் இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓமிக்ரானை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், தேவையான முன்னேற்பாடுகளை செய்து வைக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் ஏற்கனவே 3 பேர் குணமடைந்த நிலையில் மேலும் 9 பேர்  குணமடைந்துள்ளனர்.  இதுவரை 12 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் அளித்துள்ளார்.இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் அனைவரும் 1வாரம் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஒமிக்ரான் பாதிப்பை உறுதி செய்ய 39 பேரின் சளி மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி உறுதி செய்யப்படும்  என்றும்  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment