உஷாரய்யா உஷாரு.. வட இந்திய மாநிலங்களைக் குறிவைக்கும் ஒமிக்ரான்!

கொரோனா வைரஸ் தொற்றுடன் பயணம் செய்ய ஆரம்பித்து 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. கொரோனாத் தொற்று ஒருபுறம் ஓய ஒமிக்ரான், புளோரோனா என ஒவ்வொரு வைரஸ்களாக படையெடுக்கின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகிய நிலையில் தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் உருவான வைரஸ்தான் ஒமிக்ரான் வைரஸ்.

தென் ஆப்ரிக்காவில் துவங்கி உலகின் பல நாடுகளை நோக்கி படையெடுக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இந்தியாவில் ஒரு மாத காலமாக தலையெடுத்துள்ளது.

இந்தியாவில் தென் மாநிலங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாத நிலையில் வட மாநிலங்களான மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் பெரிய அளவில் பாதிப்பு உள்ளது.

இன்று காலை சுகாரத்துறை அளித்துள்ள அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5488 பேராக கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கொரோனாத் தாக்குதலின்போதும் மகாராஷ்டிரா மாநிலமே அதிக அளவில் பாதிப்புக்குள்ளான மாநிலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒமிக்ரான் பாதிப்பில் முதல் 3 இடத்தில் உள்ள இடங்களின் விவரம்:

மகாராஷ்டிரா-1367 பேர்

ராஜஸ்தான்- 792 பேர்

டெல்லி- 549 பேர்

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews