ஒமிக்ரான் பரவல்?… : கோவை திமுக கூட்டத்தை சாடிய டிடிவி!

இந்தியாவில் கொரோனாவின் புதிய உருமாறிய வைரஸான ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஒமிக்ரான் வைரஸால்  இந்தியாவில் 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி  எம்ஜிஆர் அவர்களின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நிறைய பேர் ஒன்று கூடக் கூடாது என தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதற்கு பலர் அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கோவையில் நேற்று முன்தினம் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமானோர் கூட்டமாக கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அமமுக.வின் டிடிவி தினகரன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட முதல்வர் ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறது எம்று கூறியிருக்கிறார்.

ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினர் கூடும் கூட்டங்களில் மட்டும்தான் ஒமிக்ரான் பரவும் என்று தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருக்கிறார்களோ, இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது ; மக்களைப் பற்றிய கவலையும் கிடையாது என்றும் கூறியிருக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment