ஓமிக்ரான் பற்றி விஜய் ஆண்டனியின் அதிரடி கருத்து

கடந்த 2020ல் ஆரம்பித்த கொரோனா வைரஸ் அந்த வருடம் மக்களை ஒரு வழி செய்தது. 2022லும் அந்த வைரஸ் உருமாறிய கொரோனாவாக டெல்டா வைரஸாக மாறி திடீர் மரணங்களை சம்பவிக்க வைத்தது.

2021ல் நமக்கு தெரிந்த உற்றார் உறவினர் நண்பர்கள் பலரும் இதில் பாதிக்கப்பட்டனர். திரைப்பிரபலங்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் என யாரையும் இது விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகத்தான் டெல்டாவின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வரும் வேளையில் மீண்டும் டெல்டாவில் இருந்து உருமாறிய கொரோனாவாக ஓமிக்ரான் தொற்று மிரட்டி வருகிறது.

கடந்த சில நாட்களாக வேகமாக இத்தொற்று பரவி வருவதாக கூறப்படும் நிலையில் இத்தொற்று குறித்து நடிகர் விஜய் ஆண்டனி கருத்து கூறியுள்ளார்.

ஓமிக்ரான் பத்தி ரொம்ப கவல படாதீங்க அது இன்னும் பத்து டிசைன்ல மாறி மாறி வரும் உடம்புலயும் மனசுலயும் தெம்ப வளத்துக்கங்க நமக்கு ஒன்னும் ஆகாது என கூறி இருக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment