உலகை அச்சுறுத்தும் ஒமைக்ரான் இந்தியாவில் நுழைந்துவிட்டதா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் டெல்டா வைரஸ் உள்பட வேறு சில வைரஸ்களாக உருமாறி மனித குலத்திற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் தோன்றி உயிர் பலியை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தென்னாப்பிரிக்காவிலிருந்து பல நாடுகளுக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பின் அறிகுறி இருப்பதாகவும் இது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

மேலும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவருமே பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment