வேகத்தை அதிகரித்த ஒமைக்ரான்! பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக உயர்வு!

உலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது ஒமைக்ரான் அலை. இவை முந்தைய விட கொரோனாவை  அதிக வீரியம் உள்ளதாகவும், வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றது. குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஒமைக்ரானின் பரவும் வேகம் அதிகமாகவே காணப்படுகிறது. இவை இந்தியாவிலும் சற்று அதிகமாகவே பரவியுள்ளது.

omicron variant

ஆரம்பத்தில் இந்தியாவில் மெல்ல மெல்ல பரவிய ஒமைக்ரான் தற்போது அதிக வேகத்தில் பரவிக் கொண்டு வருகிறது. இதனால் இதுவரை இந்தியாவில் மட்டும் 358 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.

ஒமைக்ரான்  பாதிப்பால்  சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவரை 114 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றும் சுகாதார துறை கூறியுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் கர்நாடகா மாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் சுகாதாரத் துறை கூறியுள்ளது. நேற்றைய தினத்தில் தமிழ்நாட்டில் மட்டும் தற்போது வரை 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment