தமிழ்நாட்டில் 97 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி! தாமதம் செலுத்தும் மத்திய அரசு: அமைச்சர் சுப்பிரமணியன்;

இன்று தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதியின் புதிய தரவு அலகு மையத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல தகவல்களை கூறினார். அதன்படி சித்த மருத்துவ பல்கலை கழகத்திற்கான அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் 10 நாட்களில் திறந்து வைப்பார் என்றும் கூறினார்.

சுப்பிரமணியன்

 

அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் தொண்ணூத்தி ஏழு பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஒமைக்ரான்  பரிசோதனை முடிவுகளை மத்திய அரசு அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

ஒமைக்ரான்  முடிவு குறித்து அறிவிப்பு வருவதற் ஒமைக்ரானிலிருந்து நோயாளிகள் குணம் அடைந்து செல்லும் நிலை நிலவுகிறது என்றும் அமைச்சர் சுப்ரமணியன் கூறினார். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முப்பத்தி நான்கு பேரில் இதுவரை 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், 16 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment