ஓமிக்ரான் பரவல் மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வட இந்திய மாநிலங்களில் ஓமிக்ரான் பரவல் அதிகமாக இருந்து வரும் நிலையில் தென் இந்தியாவிலும் ஓமிக்ரான் தொற்று பரவி வருகிறது.
இன்று முதல் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.
நாளை காலை 11 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்வில் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்பார் என தெரிகிறது.
முக்கியமாக முதல்வர் முக. ஸ்டாலினும் இதில் பங்கேற்பார் என தெரிகிறது.
இதில் கொரோனா பரவல் தடுப்பது பற்றி பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
கொரோனா பரவல், பாதுகாப்பு அம்சங்கள் , தடுப்பூசியை அனைவரும் போடசெய்வது என பல முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்பட உள்ளன.