அதிகரிக்கத் தொடங்கிவிட்டதா ஒமைக்ரான்? கனடாவில் 15 பேருக்கு உறுதி; நாடு முழுவதும் பரவ அதிக வாய்ப்பு!

உலகிற்கே மீண்டும் ஒரு அச்சம் உருவாகியுள்ளது. ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் தோன்றி உலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது ஒமைக்ரான். இந்த ஒமைக்ரான் வைரஸ் கொரோனாவின் மூன்றாவது அலையாக கூட இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது.

omicron variant

இது முதலில் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, தென் ஆப்பிரிக்காவை சுற்றியுள்ள நாடுகளில் பரவியது. அதன் பின்னர் ஐரோப்பா கண்டத்தில் இந்த ஒமைக்ரான் அதிகமாக காணப்பட்டது. இதனால் இந்தியாவில் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஒமைக்ரான் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அவ்வாறு இருந்தும் நம் இந்தியாவில் ஒமைக்ரான் பரவ தொடங்கிவிட்டது. இந்த நிலையில் கனடாவிலும் ஒமைக்ரான் பரவல் கண்டுபிடித்ததாக தகவல் உள்ளது. இதனை கனடா பொது  சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி கனடாவில் புதிதாக 15 பேருக்கு ஒமைக்ரான் வகையான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மீண்டும் கனடா முழுவதும் அதிக வீரியம் மிக்க நோய் பரவல் இருக்கும் என்று நேற்றைய தினம் கனடா பொது சுகாதாரத் துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment