இந்தியாவிலும் பரவத்தொடங்கியதா ஒமைக்ரான்? 6 பேருக்கு தொற்று உறுதி!

தற்போது உலகிற்கு அச்சத்தை தரும் நாடாக மாறியது தென்னாப்பிரிக்கா. ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக அதிக வீரியம் மிக்க கொரோனா பரவல் வருகிறது இதற்கு ஒமைக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தென் ஆப்பிரிக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் உள்ள பெரும்பாலான விமான சேவையை பல நாடுகள் ரத்து செய்துள்ளது.

ஒமைக்ரான் கொரோனா

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நம் இந்தியாவில் ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல், பிரேசில் போன்ற பல நாடுகள் காணப்பட்டது. ஏனென்றால் இந்த நாடுகளில் இந்த வீரியமிக்க ஒமைக்ரான்  பரவல் அதிகமாக உள்ளதால் இது நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு முறையான பரிசோதனை நடத்தப்படும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில் இந்த ஒமைக்ரான்  பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வந்த ஆறு பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளதால் இந்தியாவிலும் மேற்பரப்பில் மெல்ல மெல்ல ஒமைக்ரான்   தொடங்கியுள்ளதாக அச்சம் நிலவுகிறது.

அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் 6 பேருக்கு கொரோனா  உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும் அவை லேசான கொரோனா என்று கூறப்படுகிறது.

இருப்பினும் அவர்களோடு தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிந்து சோதிக்க மகாராஷ்டிரா பொது சுகாதார துறை தகவல் அளித்துள்ளது. இந்த ஆறு பேருக்கு எந்த வகை கொரோனா என்று தெரியாததால் பெரும் குழப்பம் உருவாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment