உலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது ஒமைக்ரான். இது முதலில் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் ஐரோப்பா கண்டத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வேகமாக பரவியது.
இவை இந்தியாவிலும் பரவும் அபாயம் இருப்பதால் இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசுகளும் தயார் நிலையில் இருந்தன. அதோடு மட்டுமில்லாமல் தங்களது மாநிலங்களுக்குள் வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரையும் தீவிர பரிசோதனையில் ஈடுபடுத்தி அவர்களை தனிமைப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் நேற்றையதினம் 598 பேர் வெளிநாட்டு பயணிகளை தொடர் கண்காணிப்பில் வைத்து அவர்களை தனிமைப்படுத்தி இருந்தனர். அவர்களில் இருவருக்கு ஒமைக்ரான் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்தியாவிலேயே கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 7976 பயணிகளுக்கு பரிசோதனை எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக இந்தியாவில் வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகத்தில் பரவக் கூடியது என்று ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஏற்கனவே உருமாற்றம் அடைந்த ஆல்பா, பீட்டா ,காமா வைரஸ்களின் உள்ள சில மாற்றங்களும் ஒமைக்ரான் வைரஸில் உள்ளது என்றும் ஒன்றிய சுகாதார துறை கூறியுள்ளது.மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று ஒன்றிய சுகாதாரத் துறை கூறியுள்ளது.