தமிழ்நாட்டில் 33 பேருக்கு ஒமைக்ரான்! பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்வு!!: அமைச்சர் சுப்பிரமணியன்;

இந்தியாவில் ஒமைக்ரானின் பாதிப்பு சற்று அதிகமாக காணப்படுகிறது. நம் தமிழகத்தில் இந்த ஒமைக்ரான் பாதிப்பு ஒரே ஒரு நபருக்கு மட்டும் இருந்தது. ஆனால் தற்போது மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

ஒமைக்கிரான்

இதனால் தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. ஒமைக்ரான்  தொற்று ஏற்பட்ட முப்பத்தி நான்கு பேருக்கும் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளது என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள மூன்று பேர், கேரளாவிலிருந்து தமிழ்நாடு வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாலு பேரை தவிர வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் இதனை அறிவித்தார். வெளிநாடுகளிலிருந்து வந்த 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 114 பேரில் ஐம்பத்தி ஏழு பேருக்கு எஸ்.ஜீன் மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐம்பத்தி ஏழு பேருடன் தொடர்பில் இருந்த 3 பேர் என மொத்தம் 60 பேருக்கு ஒமைக்ரான்  பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பரிசோதனையின் முடிவில் முப்பத்தி மூன்று பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது.  ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முப்பத்தி நான்கு பேரில் இருபத்தி ஆறு பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment