தமிழகத்தில் புதிதாக ஒருவருக்கு ஒமைக்ரான்! பாதிப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்வு!!

கொரோனாவை விட அதிகம் வீரியமுள்ள தாக்கமும் வேகமாகவும் பரவிக்கொண்டு வருகிறது ஒமைக்ரான் . ஒமைக்ரான்  முதலில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் பரவியது. அதன்பின்னர் உலகம் எங்கும் பரவிக் கொண்டு காணப்படுகிறது.

 

ஒமைக்ரான்

குறிப்பாக நம் இந்தியாவில் ஒமைக்ரான் பரவலின் வேகம் கடந்த ஒரு வாரத்தில் அதிதீவிரமாக காணப்படுகிறது. ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை இருக்கிறது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த பட்டுள்ளன.

ஆயினும் ஒமைக்ரான் பரவல் வேகமும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே காணப்படுகிறது. நம் தமிழகத்திலும் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் புதிதாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானதால் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நம் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றிலிருந்து இருபத்தி ஏழு பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 17 பேர் தொடர் சிகிச்சையில் காணப்படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment