மகாராஷ்டிராவில் புதிதாக 7 பேருக்கு ஒமைக்ரான்! இந்தியாவில் 32 ஆக பாதிப்பு உயர்வு!!

தென்னாப்பிரிக்காவில் தோன்றி இன்று உலகமெங்கும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி கொண்டு வேகமாக பரவிக் கொண்டு வருகிறது ஒமைக்ரான்.இதனால் தென் ஆப்பிரிக்காவுடன் உலகில் பல நாடுகள் விமான போக்குவரத்து சேவையை சில நாட்களுக்கு ரத்து செய்துள்ளது.

ஒமைக்ரான் கொரோனா

நம் இந்தியாவும் தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை ஆபத்திற்குரிய நாடுகளின் பட்டியலில் வைத்துள்ளது. இதனால் இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பவர்களுக்கு தக்க பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு இருப்பினும் இந்தியாவில் ஒமைக்ரான் பரவத் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். ஏனென்றால் இந்தியாவில் தற்போது வரை 25 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு இந்த ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் புதிதாக ஒமைக்ரான்  7 பேருக்கு பாதிப்பு உறுதியானதை அடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் ஏற்கனவே 25 பேருக்கு ஒமைக்ரான் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 32 ஆக அதிகரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment