அசுரவேகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு உலகெங்கும் பரவி வருகிறது. தற்போது வரை உலகில் உள்ள 89 நாடுகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது.
இவை இந்தியாவில் ஆரம்பத்தில் மெல்ல மெல்ல பரவிய ஒமைக்ரான் பாதிப்பு தற்போது அதி வேகத்தில் பரவி வருகிறது. முதலில் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் கண்டறியப்பட்டது.
தற்போது இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் 140 க்கும் மேற்பட்டோர்க்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மட்டும் நான்கு மாநிலங்களில் 30 புதிய ஒமைக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சம் அடையும் என்றும், இதனால் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை உருவாகும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஒமைக்ரானுக்கு ஆளானவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள், சுவாசக் கருவிகள், போன்றவை தயார் படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.