கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை! 10 நாட்களில் 15 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி: வீணா ஜார்ஜ்

நம் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. அங்கு கொரோனா மட்டும் இல்லாமல் ஒமைக்ரான் பாதிப்பும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

Veena George 1

அதன்படி கேரளத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார். கேரளாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்த 152 பேரில் 50 பேர் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

லேசான பாதிப்புள்ள நாடுகளிலிருந்து கேரளாவுக்கு வந்தவர்களில் 84 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். வெளிநாடுகளில் இருந்து கேரளம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த பதினெட்டு பேர்க்கும் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது என்று மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். கேரளத்தில் 15 லிருந்து 18 வரையான 15 லட்சம் சிறார்களுக்கு 10 நாட்களில் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்றும் வீணா ஜார்ஜ் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment