சென்னை வழியாக ஆந்திரா சென்ற பெண்ணுக்கு உறுதியானது ஒமைக்ரான் தொற்று!

உலகமெங்கும் வேகமாக ஒமைக்ரான் பாதிப்பு பரவி வருகிறது. குறிப்பாக நம் இந்தியாவிலும் இவை அதிவேகத்தில் ஒமைக்ரான்  பரவி வருவதாக காணப்படுகின்றன. இந்தியாவில் இதுவரை 12 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. நேற்றையதினம் முடிவில் இந்தியாவில் 200 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதில் நம் தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை வழியாக ஆந்திரா சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கென்யாவில் இருந்து திரும்பி சென்னை வழியாக ஆந்திரா சென்ற 30 வயதான பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு காரில் சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது.

பெண்ணின் குடும்பத்தினர் 6 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் வேறு யாருக்கும் ஒமைக்ரான் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் பெண்ணுக்கு மட்டும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானதால் ஆந்திராவிலும் ஒன்றாக இருந்த ஒமைக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment