இந்தியாவை ஆண்ட நாட்டில் சமூக பரவலாக மாறியது ஒமைக்ரான்! நாடாளுமன்றத்தில் கூறிய அமைச்சர்!!

உலகிற்குப் பெரும் அச்சமாக மாறியுள்ளது ஒமைக்ரான். ஒமைக்ரான் முதலில் தென்னாப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் தென் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியது.

omicron variant

தற்போது உலகத்தில் உள்ள பல நாடுகளில் ஒமைக்ரான் தாக்கம் கண்டறியப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் இந்தியாவின் மூன்றாவது அலையாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது.அதோடு வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மக்களை தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் இந்த வீரியமிக்க ஒமைக்ரான் சமூக பரவலானது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இங்கிலாந்தில் ஒமைக்ரான் சமூக பரவலாக தொடங்கிவிட்டதாக இங்கிலாந்து நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் இங்கிலாந்து நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவீத் இதனை கூறியுள்ளார்.இதனால் இங்கிலாந்தில் வாழும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் காணப்படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment