ஓமிக்ரான் தொற்று- வீட்டுத்தனிமை குறித்த மத்திய அரசின் புதிய விதிகள்!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக ஓமிக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது பெருநகரங்களில் தற்போது அதிகரித்திருக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா தொற்றுக்கு சில முக்கிய விஐபிகளும் இலக்காகி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் வடிவேலு, கிரிக்கெட் வீரர் கங்குலி போன்றோரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர். இன்றும் கங்குலி குடும்பத்துக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை கொரோனா பாதித்தோர் வீட்டுத்தனிமையில் இருக்கும் புதிய விதிமுறைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வீட்டுத்தனிமையில் இருக்கும் நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லை என்றால அவர்கள் 7வது நாளில் பரிசோதனை இல்லாமல் தானாகவே தனிமையில் இருந்து வெளியே வந்து விடலாம் என கூறியுள்ளது.

தொடர்ந்து மாஸ்க் அணிதல், தனி மனித இடைவேளை, கூட்டம் பொது இடங்களில் அதிகம் கூடுவது போன்றவற்றை தவிர்க்குமாறும் பொதுவான கருத்து கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment