ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர் மரணம்- இந்தியாவின் முதல் ஓமிக்ரான் மரணம் என சுகாதாரத்துறை அறிவிப்பு

உலகம் முழுவதும் ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. சில தினங்களுக்கு முன் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொற்று கடந்த வருட டெல்டா போல வேகமாக பரவி வருகிறது.

இதனால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு போன்றவை மீண்டும் அமல்படுத்தபட்டுள்ளது.

டெல்டா போல ஓமிக்ரான் அவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என சொன்னாலும் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ள ஓமிக்ரான் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் ஓமிக்ரான் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.

இதுதான் இந்தியாவில் ஏற்பட்ட முதல் ஓமிக்ரான் மரணம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment