ஓமைக்ரான் தொற்று அமைச்சர் விளக்கம்

கடந்த 2019ம் ஆண்டு வூகான் நகரில் ஆரம்பித்த கொரோனா தொற்று 2020ம் வருடத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டு மீண்டும் 2021க்குள்ளும் நுழைந்து மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

அதிலும் 2021ம் ஆண்டு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி நமது நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள், திரைப்பிரபலங்கள் பலரை நம்மிடம் இருந்து பிரித்தது.

2021ம் வருடம் டெல்டா ப்ளஸ் வைரஸ் பாதித்ததில் அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்ட நிலையில் தற்போது அதனினும் இருந்து உருமாறிய ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது அது வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓமிக்ரான் பாதித்தால் என்ன செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் எனவும் 2 முறை கொரோனா பரிசோதனை ரிசல்ட் நெகட்டிவ் ரிசல்ட் வந்து விட்டால் வீட்டை விட்டு வெளியே வரலாம் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment