சீனாவில் அதிவேகமாய் பரவும் ஒமைக்ரான் !! பீதியில் உலக நாடுகள்…

கொரோனாவின் தாய் நாடான சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரம் நபர்களுக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் ஓராண்டிற்குப் பிறகு கொரோனாவின் தொற்று வேகமாக பரவி வருகிறது.

கடந்த மாதத்தில் மட்டும் சீனாவில் 56 ஆயிரம் நபர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் ஷாங்காங் நகரை சேர்ந்தவர்கள். சுமார் 2 கோடி 60 லட்சம் மக்கள் வசித்து வரும் மிகப்பெரிய வர்த்தக நகரமான ஷாங்காங் நகரில் மார்ச் 28 தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இந்நகரில் படிப்படியாக தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் கணவன் மனைவி ஒரே படுக்கையில் தூங்கவோ, முத்தமிட்டுக்கொள்ள கூடாது என சீன அரசு புது உத்தரவை பிறப்பித்துள்ளது.

வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் ஒருவரை ஒருவர் கட்டி அணைக்க கூடாது என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷாங்காய் நகரில் ஆம்புலன்ஸ் வாகனத்தை தவிர வேறு எந்த வாகனத்தையும் பார்க்க முடியவில்லை.

நேற்று முந்தினம் 20, 398 நபர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 22,609 ஆக அதிகரித்துள்ளது.பிற நகரங்களிலும் தொற்றுபரவல் அதிகரிப்பதால் 23 நகரங்களில் முழுமையான அல்லது பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது. இதனால் உலக நாடுகள்  அச்சம் அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment