தொடங்கியது ஒமைக்ரான் பயம்! 598 பேர் ஏழுநாள் தனிமைப்படுத்தப்படல்!!

உலகிற்கே மிகப்பெரிய அச்சத்தை கொடுத்தும் வைரஸ் கிருமி கொரோனா என்று கூறலாம். கொரோனா முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. இவ்வாறு இருக்கையில் கடந்த சில வாரங்களாக தென்னாப்பிரிக்காவில் புதிய வகையான கொரோனா வேகமாக பரவுகிறது.

ஒமைக்ரான் கொரோனா

இதற்கு ஒமைக்ரான்  என்று பெயரிடப்பட்டுள்ளது. இவை அதிக வீரியம் மிக்க கொரோனாவாக பரவி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மருத்துவத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் இந்த ஒமைக்ரான் கொரோனா இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் ஒமைக்ரான் கொரோனா பற்றிய அச்சம் நிலவ தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் கொரோனா அச்சம் காரணமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாவில் எடுக்க பட்டு வருகின்றன.

அதன்படி பெங்களூரு வந்த 598 வெளிநாட்டு பயணிகள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 598 வெளிநாட்டு பயணிகளுக்கு சோதனை செய்ததில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா நோய் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக 598 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். அதோடு தென்னாப்பிரிக்காவில் இருந்த 2 பயணிகளுக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment