ஓம் சரவணபவ என்பதன் பொருள் இதுதான்!!

c29ad8fe0b5e9b1d5e50698a742e1e6e

சிவபக்தர்களுக்கு ஓம் நமச்சிவாய! பெருமாள் பக்தர்களுக்கு கோவிந்தா! சக்தி பக்தர்களுக்கு ஓம் சக்தி! பராசக்தி.. இப்படி ஒவ்வொரு தெய்வத்துக்கும் அட்சர மந்திரம் உண்டு,. அதன்வரிசையில் முருகனுக்கு ஓம் சரவண பவ! என்பதே அட்சர மந்திரமாய் விளங்குகின்றது.

ஓம் சரவண பவ என்பதன் விளக்கம் என்னவென்று தெரிந்துக்கொண்டு அதை முறைப்படி உச்சரிப்பது மிகுந்த பலனை தரும். சரவண பவ என்பதற்கு பல அர்த்தங்கள் சொல்ல்லப்படுது. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

விளக்கம் 1

ச … செல்வம்
ர … கல்வி
வ … முக்தி
ண … பகை வெல்லல்
ப … கால ஜெயம்
வ … ஆரோக்கியம்

e2026bb34df651d92dbb84f5c84fff75

விளக்கம் 2

சரவணபவன் … நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன்

விளக்கம் 3

ச … மங்களம்
ர … ஒளி கொடை
வ … சாத்துவிகம்
ண … போர்
பவன் … உதித்தவன்

விளக்கம் 4

ச (கரம்) … உண்மை
ர (கரம்) … விஷயநீக்கம்
அ (வ) (கரம்) … நித்யதிருப்தி
ண (கரம்) … நிர்விடயமம்
ப (கரம்) … பாவநீக்கம்
வ (கரம்) … ஆன்ம இயற்கை குணம்

இப்படி நால்வகையான அர்த்தங்கள் சொல்லப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews