உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கின என்பதும், நேற்றைய தொடக்க விழா மிகப் பெரிய அளவில் பிரமாண்டமாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது, அமெரிக்க அதிபர் ஜோபடைனின் மனைவி உள்பட பல வெளிநாட்டு பிரமுகர்கள் இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவிற்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் தீபாகுமாரி மற்றும் பிரவீன் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனையடுத்து இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள தீபா குமாரி – பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதியில் தென்கொரிய அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன் உள்ளிட்டோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை என்றாலும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது