Connect with us

இன்றுடன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு: இந்தியாவுக்கு 48வது இடம்!

Sports

இன்றுடன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு: இந்தியாவுக்கு 48வது இடம்!

8fa70ca6bf1f76f7a2debc0bf95d3c76-1

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23ஆம் தேதி ஆரம்பித்த ஒலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா 7 பதக்கங்களுடன் 48வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் முடிவடைந்தது. இன்று நடந்த இறுதி விழாவில் இந்தியாவின் சார்பில் தேசிய கொடியை வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அவர்கள் ஏந்தினார்

கடந்த சில நாட்களாக நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பட்டியலில் 113 பதக்கங்கள் பெற்று அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சீனா இரண்டாவது இடத்திலும், 58 பதக்கங்கள் பெற்று போட்டியை நடத்தும் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

7 பதக்கங்களுடன் இந்தியா 48வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கம், ரவிகுமார் தஹியா மற்றும் மீராபாய் சானு வெள்ளி மற்றும் பிவி சிந்து, லாவ்லினா, பஜ்ரங் புனியா மற்றும் இந்திய ஹாக்கி அணிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top