ஆர்.ஏ புரத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த முதியவர் மரணம்!

ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகள் எனக்கூறி பிடிக்க முற்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த முதியவர் கண்ணையன் சிகிச்சை பலனின்றி  மரணம் அடைந்தார்.

ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகரில் கடந்த மாதம் 29ம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவு எனக்கூறி பக்கிங்காம் கால்வாய் அருகே உள்ள இளங்கோ தெருவில் வீடுகளை இடிக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோவிந்தசாமி நகரில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுனர். வீடுகள் இடிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்றது.

அந்தப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு கால அவகாசம் மக்கள் கோரினார். மேலும் ஒதுக்கப்படும் வீடுகள் சென்னைக்கு புறநகர்ப் பகுதியில் இருப்பதாகவும் நகர் பகுதியில் வீடு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இருந்தும் பெரும்பாக்கம் படத்தை எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு ஒதுக்கப்பட்டு அதற்கான டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டது.

அதற்கு இந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல நாட்களாக இந்த பகுதிகளில் வசித்து வரும் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் என கூறினர். சுமார் 259 வீடுகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் தொடர்ச்சியாக 10வது நாளாக வீடுகள் இடிக்கப்பட்டது.

இதற்கு அந்தப் பகுதியில் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் கண்ணையன் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் முன்னிலையில் தனது உடலில் தீ கொளுத்தினார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கண்ணையன் உடலில் 90% தீ காயங்களுடன் நேற்று சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை 3:30 மணிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அகாலமரணம் அடைந்தார். தன் மகனின் மரணத்தை அடுத்து கோவிந்தசாமி நகரில் அவர் வீட்டின் முன்பு அந்தப் பகுதி மக்கள் குவிந்துள்ளனர். காலை 10 மணிக்கு கண்ணையனின் உடல் கூராய்வு செய்யப்படுகிறது. இறந்த கண்ணையனுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மயிலாப்பூர் பகுதிகளில் கூலித் தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment