செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் ரயில் மோதி உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்டுள்ள மூதாட்டி மீண்டும் வீடு திரும்பியதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூடுவாஞ்சேரியில் வசித்து வரும் 72 வயதான சந்திரா என்ற மூதாட்டி, தனது மகன் பராமரிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் சிங்கப்பெருமாள் கோயிலுக்கு செல்வதாக கூறி கடந்த செவ்வாய் கிழமை சென்றதாக தெரிகிறது.
இதற்கிடையில் ரயில் தண்டவாளத்தில் இருந்து மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது சங்கீதாவை போல் இருந்ததால் ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் உடலை பெற்று அடக்கம் செய்துள்ளனர்.
இந்த சூழலில் புதன்கிழமை காலை சந்திரா வழக்கம்போல் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும், அடக்கம் செய்யப்பட்டுள்ள மூதாட்டியின் உடல் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.