தலைமைச் செயலகம் முன்பு மூதாட்டி தர்ணா… குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்திய போலீஸ்!

தனது நிலத்தை அரசு அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச்செயலகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

சேலம் மாவட்டம் வாழப்பாடி சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்க இந்திராணி என்பவர் தலைமை செயலகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வசிக்கும் இந்திராணி என்பவருக்கு சொந்தமான நிலத்தை அரசு அதிகாரிகளின் உதவியுடன் சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்

அரசு அதிகாரிகளின் துணையுடன் குடியிருக்கும் இடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் தனக்கு நீதி வேண்டி தலைமைச்செயலகத்தில் சட்டப் பேரவை நடக்கும் வாயிலின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment